உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு

ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்றும் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். பல பண்டிகைகள், ஒரே காதல் என்ற பெயரில் அப்படக்குழு இந்த புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில், அந்தக்காலத்து நாயகர்களைப்போன்ற கெட்டப்பில் ரொமான்டிக் லுக்கில் தோன்றுகிறார் பிரபாஸ். ரோம் பின்னணியில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. பான் இந்திய படமாக உருவாகும் ராதே ஷ்யாம் வருகிற ஜூலை 30ல் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !