படப்பிடிப்பு குழுவுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட ஷாருக்கான்
ADDED : 1778 days ago
ஷாருக்கான், சல்மான்கான், ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோனே நடிக்கும் படம் பதான். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். கடந்த ஆண்டே முடிந்திருக்க வேண்டிய இந்த படத்தின் பணிகள் கொரோனா கால ஊரடங்கின் காரணமாக முடியவில்லை.
கொரோனா தளர்வுகளுக்கு பிறகு சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. மும்பையில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் அரசு விதிமுறைகளின்படி படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஷாருக்கான் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் பதான் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.