உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மும்பை பிலிம் பெஸ்டிவல் தலைவர்: ராஜினாமா செய்தார் தீபிகா படுகோனே

மும்பை பிலிம் பெஸ்டிவல் தலைவர்: ராஜினாமா செய்தார் தீபிகா படுகோனே

கோவா, கோல்கட்டா, சென்னை, திருவனந்தபுரம் சர்வதேச பட விழாக்களை போன்று மும்பை சர்வதேச பட விழாவும் முக்கியமானது. இந்த விழாக்குழுவின் தலைவராக அமீர்கானின் மனைவி கிரண் ராவ் இருந்தார். கடந்த 2019ல் மும்பை திரைப்பட விழா தலைவராக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியை தீபிகா படுகோனே திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்ட்ராகிராமில் அவர் கூறியிருப்பதாவது: மும்பை திரைப்பட விழா தலைவராக இருந்து சினிமாவையும், உலகம் முழுவதும் உள்ள சாதனையாளர்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றிய அனுபவம் மகிழ்ச்சியானது. ஆனால் தற்போது எனது இதர பணிகள் காரணமாக திரைப்பட விழா தலைவர் பதவிக்கு அர்ப்பணிப்பை கொடுக்க இயலவில்லை. எனவே இந்த பதவியில் இருந்து விலகுகிறேன். என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !