உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மராட்டிய நடிகர் வீர சத்திதார் கொரோனாவுக்கு பலி

மராட்டிய நடிகர் வீர சத்திதார் கொரோனாவுக்கு பலி

பிரபல மராட்டிய குணசித்ர நடிகர் வீர சத்திதார். சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த கோர்ட் என்ற மராட்டிய படம் தேசிய விருது பெற்றது. இந்த படம் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட இந்தி மற்றும் மாராட்டிய படங்களில் நடித்துள்ள வீர சத்திதார் முதுமை காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

74 வயதான வீர சத்திதாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இந்தி மற்றும் மராட்டிய மொழி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !