தடகள வீராங்கனையை பாராட்டிய சிவகார்த்திகேயன்
ADDED : 1635 days ago
நடிகர் சிவகார்த்திகேயன் சத்தமில்லாமல் பல விளையாட்டு வீரர்களுக்கும், படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கும் உதவி வருகிறார். திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி தனலட்சுமி, தடகள விளையாட்டு வீராங்கனையாகவும் இருக்கிறார். சமீபத்தில் நடந்த தேசிய தடகள போட்டியில் கலந்து கொண்ட தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு புதிய சாதனை படைத்தார்.
11.39 விநாடிகளில் தூரத்தை கடந்த தங்கப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் இந்தியாவின் முன்னணி ஓட்டப்பந்தைய வீராங்கனை ஹிமா தாஸின் சாதனையை முறியடித்தார். இதனால் தற்போது அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அடிப்படையில் திருச்சிக்காரான சிவகார்த்திகேயன் தனலட்சுமியை தனது அலுவலத்திற்கு அழைத்து பாராட்டி, பரிசுகளை வழங்கினார். அதோடு விளையாட்டு தொடர்பாக தனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கும்படி கூறியுள்ளார்.