உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அம்மா வேடத்தில் நடிக்க ராஷ்மிகா மறுப்பு

அம்மா வேடத்தில் நடிக்க ராஷ்மிகா மறுப்பு

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. கீதாகோவிந்தம், டியர் காம்ரேட், சுல்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ஜெர்சி படத்தின் இந்தி ரீமேக்கில் ராஷ்மிகா நடிக்க பேசப்பட்டது. கதைப்படி 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டியது இருந்ததால் ராஷ்மிகா மறுத்து விட்டார். ஜெர்சி தெலுங்கு படத்தில் அந்த வேடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். ராஷ்மிகா நடிக்க மறுத்து விட்டதால் தற்போது மிருணாள் தாகூர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பாலிவுட்டில் அறிமுகமாகி நடித்து வரும் நேரத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தால் அது தனது இமேஜை பாதிக்கும் என்று ராஷ்மிகா கருதுகிறார். இளம் கமர்ஷியல் ஹீரோயினாக பாலிவுட்டில் வளர வேண்டும் என்பதே ராஷ்மிகாவின் திட்டம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !