மேலும் செய்திகள்
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1604 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1604 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1604 days ago
தென்னிந்திய மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் சோனு சூட் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனு சூட். தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு இந்தியாவில் கொரோனா பிரச்னை துவங்கியபோது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு பஸ், ரயில், ஏன் விமானங்களில் கூட அனுப்பி வைத்தார். மேலும் கொரோனா காலக்கட்டத்தில் நிறைய பேருக்கு உதவி செய்து வந்தார். சிலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். விவசாய செய்ய ஒரு குடும்பத்திற்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். நிறைய பேருக்கு படிக்க செல்போன் வாங்கி தந்தார். இப்படி ஏராளமான உதவிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இப்போது நடிகர் சோனு சூட்டும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுப்பற்றி டுவிட்டரில் அவர் கூறுகையில், கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால் எனது மன நிலை அதை விட உறுதியாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டுவிட்டேன். கவலைப்பட ஒன்றுமில்லை. உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இது எனக்கு அதிக நேரத்தைத் தந்திருக்கிறது. உங்களுக்காக நான் என்றும் இருப்பேன் என்பதை மறக்காதீர்கள் என பதிவிட்டுள்ளார் சோனு சூட்.
1604 days ago
1604 days ago
1604 days ago