உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிங்கிள் ஷாட்டில் ஹன்சிகா மட்டுமே நடிக்கும் 105 நிமிடங்கள்

சிங்கிள் ஷாட்டில் ஹன்சிகா மட்டுமே நடிக்கும் 105 நிமிடங்கள்

தெலுங்கில் ஹன்சிகா ஒப்பந்தமாகியிருக்கும் புதிய படம் 105 நிமிடங்கள். ராஜூ துஷா என்பவர் இயக்க, பூமக் சிவா தயாரிக்கிறார். ஹன்சிகா மட்டுமே நடிக்கும் இந்தபடம் சிங்கிள் ஷாட்டில் படமாகிறது. அதோடு எடிட்டிங் எதுவும் செய்யப்படாமல் சிங்கிள் ஷாட்டில் படமாவதை அப்படியே வெளியிடுகிறார்கள்.

இதுகுறித்து ஹன்சிகா வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛சிங்கிள் கேரக்டர் சிங்கிள் ஷாட்டில் நடித்து தயாராகும் இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக அமைந்துள்ளது. அதோடு, இந்தபடம் எனது கேரியரில் மைல்கல் படமாக இருக்கும்'' என்றும் தெரிவித்துள்ளார் ஹன்சிகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !