உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமலின் விக்ரம் - என்ன சொல்கிறார் விஜய் சேதுபதி

கமலின் விக்ரம் - என்ன சொல்கிறார் விஜய் சேதுபதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் பகத் பாசில் நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்தார். இதனால் அவர்தான் அந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்கிற செய்திகள் வெளியாகின. அதேசமயம் அதற்கு முன்பே கமலின் விக்ரமில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் பகத் பாசில் தான் நடிப்பதை உறுதிப்படுத்திய பிறகு கமல் படத்தில் விஜய் சேதுபதி இல்லை என்று கருதப்பட்டது.

ஆனால் இப்போது விஜய் சேதுபதி கூறியுள்ள ஒரு செய்தியில், விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க என்னை கேட்டார்கள். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்கிறேனா என்பதை இப்போதே சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !