தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம்
ADDED : 1650 days ago
அனிமேஷன் மற்றும் கார்டூன் படங்கள் தமிழில் அரிதாகவே தயாராகும். தற்போது டாக்டர்.கிரீன் என்ற சூப்பர் ஹீரோ படம் தயாராகி உள்ளது. இது மோசன் காமிக்ஸ் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை ஜபீஸ் டேவியோ இயக்கி உள்ளார். முத்தமிழ் இதன் வரைகலை பணியை செய்துள்ளார், அரிமா இசை அமைத்துள்ளார். லிப்ரா புரொடக்ஷன் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரித்துள்ளார். உலகை அழிக்க நினைக்கும் தீய சக்திகளிடமிருந்து உலகத்தை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ கதை.