உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு

சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு

இந்தியன்-2, நவரசா, டக்கர் ஆகிய படங்களில் நடித்து வரும் சித்தார்த், தமிழ், தெலுங்கில் அஜய் பூபதி இயக்கத்தில் தயாராகி வரும் மகா சமுத்ரம் என்ற படத்தில் சர்வானந்துடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தில் அனு இம்மானுவேல், அதிதிராவ்நாயகிகளாக நடித்துள்ளனர். ஆகஸ்ட் 19-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இன்று சித்தார்த் தனது 42ஆவதுபிறந்த நாளை கொண்டாடுகிறார். அதையொட்டி மகா சமுத்ரம் படக்குழுவினர் சித்தார்த்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் சித்தார்த். ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்த பாய்ஸ் படத்தில் விவேக் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !