ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின்
ADDED : 1650 days ago
தமிழில் ரன் படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பிறகு விஷாலுக்கு ஜோடியாக நடித்த சண்டக்கோழி படமும் இவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று தந்து. அதை தொடர்ந்து தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்த மீரா ஜாஸ்மின், கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு இடைவெளி விட்டார்.
கடைசியாக 2015ல் மீரா ஜாஸ்மின் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. இந்தநிலையில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கவுள்ள இந்தப்படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.