படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம்
ADDED : 1728 days ago
தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். கொரோனா காலத்தில் தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது. தெலுங்கனா அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளின்படி படப்பிடிப்புக்கு வரும் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் படப்பிடிப்பில் பங்கேற்கும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர். படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்த மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறார்கள்.