விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார்
சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் மாரடைப்பால் நடிகர் விவேக் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அரசு மருத்துவமனையும், தமிழக அரசின் சுகாரத்துறையும் அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் நடிகர் மன்சூரலிகான் மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு தடுப்பூசியால் தான் விவேக் மரணம் அடைந்தார். அவர் சாவுக்கு தமிழக அரசு தான் பொறுப்பு என்கிற ரீதியில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார்.
விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டது பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் மன்சூரலிகான் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார். அதன்படி நடிகர் மன்சூரலிகான் மீது மாநகராட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்.டுள்ளது.