வருகிறார் ஜூனியர் நயன்தாரா
ADDED : 1680 days ago
மலையாளத்தில் கிலுக்கம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி நயன்தாரா மம்முட்டி , மோகன்லால், ரஜினிகாந்த் உள்பட தென்னகத்தின் முன்னணி நடிகர்களுடன் 30க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
5 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க தயாரகிவிட்டார். குழந்தை நட்சத்திரமாக அல்ல ஹீரோயினாக. தமிழில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதே நயன்தாராவின் ஆசை. ஏற்கெனவே ஒரு நயன்தாரா இருப்பதால் தனது பெயருடன் தந்தையின் பெயரை இணைத்து நயன்தாரா சக்ரவர்த்தி என்று வைத்துக் கொண்டுள்ளார்.