ஒரு மில்லியன் பாலோயர் - வரலட்சுமி நன்றி
ADDED : 1631 days ago
தமிழ், தெலுங்கில் கதாநாயகி, வில்லி, கதையின் நாயகி என நடித்து வருகிறார் வரலட்சுமி. இவர் நடித்து முடித்துள்ள சில படங்கள் வெளியீட்டில் தாமதமாகி வருகின்றன. தெலுங்கில் அவர் நடித்த நாந்தி, கிராக் என்ற இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் தற்போது தெலுங்கில் வரலட்சுமியின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. இதனால் தமிழ், தெலுங்கில் நிறைய ரசிகர்களை பெற்றுள்ளார் வரலட்சுமி. சோசியல் மீடியாவில் இவர் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோயர்களை எட்டிப்பிடித்துள்ளார் வரலட்சுமி. இதையடுத்து, ஒரு மில்லியன் இதயங்கள், அவர்களின் அன்புக்கு நன்றி என அவர் பதிவிட்டுள்ளார்.