உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் பிரபலம் சாரா குர்பாலுக்கு கொரோனா

பிக்பாஸ் பிரபலம் சாரா குர்பாலுக்கு கொரோனா

பிரபல பஞ்சாபி மொழி நடிகை சாரா குர்பால் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உள்ளார். இவர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியில் பங்கேற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சாரா குர்பாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

“எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !