மோகன்லாலின் பாரோஸ் - சந்தோஷ்சிவன் வெளியிட்ட அப்டேட்
ADDED : 1630 days ago
மலையாள சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக கோலேச்சி வருபவர் மோகன்லால். நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என இதுவரை தன்னை வெளிப்படுத்தி வந்துள்ள மோகன்லால் முதன்முதலாக பாரோஸ்-கார்டியன் ஆப் டி காமாஸ் டிரஷ்ஷர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை கேரளா மட்டுமின்றி கோவா, போர்ச்சுக்கல் போன்ற நாடுகளிலும் நடத்துகிறார் மோகன்லால். தற்போது கொரோனா தொற்று நேரத்திலும் கேரளாவில் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்த பாரோஸ் படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில் மோகன்லாலுடன் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் புகைப்படமொன்றை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படத்தை இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய ஜிஜோ புன்னூஸ் எழுதிய கார்டியன் ஆப் டி காமாஸ் டிரெஷ்ஷர் என்ற நாவலை தழுவி மோகன்லால் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.