விஜய் 67 - ஜூனியர் என்டிஆர் இணைகிறாரா?
ADDED : 1629 days ago
மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் தனது 65ஆவது படத்திற்காக ஜார்ஜியாவில் முகாமிட்டுள்ளார் விஜய். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், விஜய்யின் 66ஆவது படம் குறித்த உறுதியான செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்தநிலையில், விஜய்யின் 67ஆவது படம் குறித்தும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த படத்தை ஏற்கனவே விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லி இயக்குவதாக கூறப்படுகிறது. அதோடு, அப்படத்தில் விஜய்யுடன் ஜூனியர் என்டிஆரை இணைத்து நடிக்க வைக்க அட்லி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும், 2022 ஆம் ஆண்டு அப்படத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.