பவன்கல்யாணை கலாய்த்து, ராஜமவுலியையும் வம்புக்கு இழுத்த ராம்கோபால்வர்மா
ADDED : 1675 days ago
சினிமா, அரசியல் பிரபலங்கள் குறித்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வரும் நடிகரும், அரசியல்வாதியுமான பவன்கல்யாணையும் தனது டுவிட்டரில் கலாய்த்துள்ளார் ராம்கோபால் வர்மா.
அதாவது, பவன் கல்யாண் வெளியிட்டுள்ள போட்டோவை தனது டுவிட்டரில் பதிவிட்டு, இந்த புகைப்படத்தில் எது போலி என்பதை எனக்கு சொல்லுங்கள். சரியாக சொல்பவர்களுக்கு பரிசு தருவேன் என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த ஆர்ட் டைரக்சனில் ஏதோ தவறாக உள்ளது. ராஜ மவுலி சார் தயவு செய்து உங்களது ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலை கேட்டு எனக்கு சொல்லுங்கள் என்று ராஜமவுலியிடம் கேட்பது போலவும் பதிவிட்டு அவரையும் இந்த சர்ச்சைக்குள் இழுத்திருக்கிறார் ராம்கோபால்வர்மா.