புராண படத்தில் சுப்ரமணியபுரம் ஸ்வாதி
ADDED : 1629 days ago
தமிழில் கடைசியாக திரிஎன்ற படத்தில் நடித்த சுப்ரமணியபுரம் சுவாதி, 2018ம் ஆண்டில் விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து மூன்று ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்தவர் தற்போது மீண்டும் ஐதராபாத்துக்கு வந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கில் ஹர்ஷா புலிபாக்கா இயக்கியுள்ள பஞ்சதந்திரம் என்ற புராணப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஸ்வாதி. இப்படத்தில் நரேஷ் அகஸ்தியா, ராகுல் விஜய், சமுத்திரகனி, சிவத்மிகா ராஜசேகர், பிரம்மாநந் தம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கும் சுவாதி, மேலும் புதிய படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.