நான் பேஸ்புக்கில் இல்லை : எச்சரித்த அதுல்யா ரவி
ADDED : 1620 days ago
ஏமாலி, அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த அதுல்யா ரவி இப்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் தளத்தில் இயங்கி வருகிறார். ஆனால் பேஸ்புக்கில் இல்லை. இந்நிலையில் இவரது பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு குறித்து இவரது கவனத்திற்கு வர, இதுப்பற்றி, ‛‛என் பெயரில் யாரோ பேஸ்புக்கில் போலியான முகவரியை உருவாக்கி, சினிமாவில் எனக்கு தெரிந்தவர்களுடன் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புவது ஏன் என்று தெரியவில்லை. இது மோசமானது. இதுப்பற்றி புகார் அளித்துள்ளேன். நான் பேஸ்புக்கில் இல்லை, தயவு செய்து இந்த ஐடி குறித்து புகார் செய்யுங்கள்'' என தெரிவித்துள்ளார்.