உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றிமாறனின் விடுதலையில் கவுதம் மேனனுக்கும் பங்கு

வெற்றிமாறனின் விடுதலையில் கவுதம் மேனனுக்கும் பங்கு

அசுரன் என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த வெற்றிமாறன், அடுத்ததாக மீண்டும் மாஸ் ஹீரோக்களை தேடாமல், நகைச்சுவை நடிகர் சூரியை கதையின் நாயகனாக மாற்றி 'விடுதலை' என்கிற படத்தை இயக்கி வருகிறார். அதேசமயம் இந்தப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதியும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் சூரி கான்ஸ்டபிள் ஆகவும், விஜய்சேதுபதி கைதி ஆகவும் இருப்பது போன்ற பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

மேலும் இதில் இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் உயரதிகாரியாக நடிக்கிறாராம் கவுதம் மேனன், முந்தைய படங்களில் அவர் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றது போல அல்லாமல், சூரி, விஜய்சேதுபதி ஆகியோருடன் சேர்ந்து படம் முழுதும் வரும் விதமான கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !