அண்ணாத்த - சிறப்பு விமானத்தில் ஐதராபாத் சென்ற நயன்தாரா
ADDED : 1623 days ago
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‛அண்ணாத்த'. இதன் படப்பிடிப்பை ஐதராபாத் ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் தீவிரமாக நடக்கிறது. சில வாரங்களுக்கு முன் ரஜினி தனி விமானத்தில் ஐதராபாத் சென்று, படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இப்போது நடிகை நயன்தாராவும் சிறப்பு விமானம் மூலம் இதன் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் இவர் ஸ்டைலாக நடந்து வரும் போட்டோக்கள் சமூகவைலைதளங்களில் வைலராகின. இன்னும் இரண்டு, மூன்று வாரங்கள் மட்டுமே அண்ணாத்த படப்பிடிப்பு உள்ளது. அதனால் இரவு, பகல் பார்க்காமல் முழுவீச்சாக நடத்தி வருகின்றனர்.