உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடங்காமை : நண்பர்களின் கதை

அடங்காமை : நண்பர்களின் கதை

வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன்.புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கும் படம் அடங்காமை. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர் கோபால். இவர் படமாக மங்களாபுரம் என்ற படத்தை இயக்கியவர்.

இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்திருக்கிறார். ஆந்திராவில் பிரபல விளம்பர மாடலான பிரியா கதாநாயகி. மற்றும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா,முகிலன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ஆர்.கோபால் கூறியதாவது: சிறுவயதிலிருந்து ஒன்றாகப் பழகிய மூன்று நண்பர்கள் ஆளுக்கொரு ஒரு லட்சியத்தோடு வளர்கிறார்கள். அதன்படி அவர்களில் ஒருவன் டாக்டராகவும் இன்னொருவன் நடிகனாகவும் மற்றொருவன் அரசியல்வாதியாகவும் மாறுகிறார்கள்.

டாக்டரை வளர்த்தெடுத்த பாதிரியார் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார். அதுமட்டுமல்ல காதலியின் அக்காவும் கொலை செய்யப்படுகிறாள். கொலைக்கான மர்மம் புரியாமல் குழம்பிப் போய் நண்பர்களின் உதவியை நாடுகிறான் டாக்டர். கொலைகாரன் யார், கொலைக்கான காரணம் என்ன? இதற்கும் மற்ற நண்பர்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளதா என்பதற்கு பதில் சொல்லும் படமாக இருக்கும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !