நடிகை விஜயலட்சுமி மீது விடுதி மேலாளர் புகார்
சென்னை : சென்னை தி.நகரில் வாடகை பாக்கி தராமல் நடிகை விஜயலட்சுமி மிரட்டி வருவதாக விடுதி மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தி.நகர் அபிபுல்லா சாலையில் ரிச் இன் என்ற சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு விடுதி உள்ளது. இதன் மேலாளர் விக்னேஷ்வரன் 34, நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நடிகை விஜயலட்சுமி தன் சகோதரியுடன் பிப். 24ல் ரிச் இன் என்ற சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் விடுதி ஒன்றை எடுத்து வசித்து வந்தார்.
கடந்த மாதம் சகோதரியின் சிகிச்சைக்காக விடுதி அறையை பூட்டி சென்றவர் இம்மாதம் 24ம் தேதி திரும்பினார். அப்போது விடுதி மேலாளர் உத்தரவின்படி அவரது உடைமைகளை மாற்று அறையில் ஊழியர் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த நடிகை ஆத்திரத்தில் விடுதி ஊழியரை காலணியால் தாக்கி விடுதியில் தங்கியிருந்ததற்கான 1.50 லட்சம் ரூபாய் தராமல் மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை பெற்று தருமாறு குறிப்பிட்டு இருந்தார். புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.