உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ், கன்னடத்தில் தயாராகும் தருணம்

தமிழ், கன்னடத்தில் தயாராகும் தருணம்

அகஸ்தியா கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் செல்லைய்யா தயாரிக்கும் படம் தருணம். கன்னடம் மற்றும் தமிழில் தயாராகிறது. ராகு ரஞ்சன், மானஷா கவுடா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கிரன் பிட்டிங் ஒளிப்பதிவு செய்கிறார். ராகரமணா இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கே.பி.ரகு கூறியதாவது: புதுமண தம்பதிகள் தேனிலவுக்காக பயணம் செய்கிறார்கள். அவர்கள் தங்கும் அறையில் ஒரு கருமையான உருவம் இவர்களை மிரட்டுகிறது. தம்பதிகள் அங்கிருந்து தப்பித்து தங்கள் ஊருக்கு வருகின்றனர். ஆனால் தம்பதிகள் வருவதற்கு முன்பே அதே உருவம் வருகிறது. அதை பார்த்து மீரளும் தம்பதிகள் அங்கிருந்து தப்பித்து வேறு இடத்திற்கு செல்கின்றனர். அங்கும் இவர்களை மிரட்டுகிறது.

அந்த உருவம் எங்கு சென்றாலும் இவர்களுக்கு முன்பே அங்கு ஆஜர் ஆகும் இந்த கருப்பு உருவத்தில் இருந்து தம்பதிகள் தப்பித்தனரா என்ற பின்னணியில் உருவாகிறது தருணம். இதுவரை வெளியான பேய் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ளது. மங்களூர், சிக்மகளூர், கோவை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் உருவாகியுள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !