துல்கர் படத்தை இயக்க திட்டமிட்டிருந்த கே.வி.ஆனந்த்
ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்தின் திடீர் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை அனைவருக்கும் தந்துள்ளது. எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்காத மனிதர் என பெயரெடுத்த கே.வி,ஆனந்த், கமர்ஷியலான படங்களை தருபவர் என்பதால் நடிகர்கள் பலரும் இவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர்.
சூர்யாவை வைத்து கடைசியாக காப்பான் படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் அடுத்ததாக யாருடைய படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்தநிலையில் அவர் துல்கர் சல்மானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்காக கதையை தயார் செய்து வந்ததாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த பத்திரிகையாளரும் கே.வி.ஆனந்தின் நண்பருமான ரஜனீஸ் என்பவர் தனது டுவீட்டில் இதுபற்றி ரஜனீஸ் கூறும்போது, “கடைசியாக விவேக் இறந்த நாளன்று கே.வி.ஆனந்துடன் ப்ர்சியது. தனது அடுத்த படத்திற்காக துல்கர் சல்மானை சந்தித்து பேச வேண்டும் என கூறினார்.. சிம்புவை வைத்து படம் இயக்கும் யோசனையும் அவரிடம் இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்