உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொரோனாவிலிருந்து மீண்டு வரும் பூஜா ஹெக்டே

கொரோனாவிலிருந்து மீண்டு வரும் பூஜா ஹெக்டே

தமிழில் விஜய் 65ஆவது படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே, தெலுங்கில் ஆச்சார்யா, ராதே ஷ்யாம், மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலர்ஸ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான பூஜா ஹெக்டே அந்த தகவலையும் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டவர், தன்னுடன் தொடர்பில் இருந்த வர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வருகிறார் பூஜா ஹெக்டே. மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் தனது புதிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் மந்தமாகவோ பலவீனத்தின் அறிகுறி எதுவுமே அவரிடத்தில் இல்லை. எப்போதும் போலவே உற்சாகமாக காணப்படுகிறார். அதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தவே இந்த உற்சாகமான போட்டோவை பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !