உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்முட்டி தான் காரணம் ; மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல்

மம்முட்டி தான் காரணம் ; மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல்

பேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக மலையாளத்தில் 'பட்டம் போலே' என்கிற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமாகி இருந்தார். தான் சினிமாவில் அறிமுகமாவதற்கு மம்முட்டியே காரணம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.

இவரது தந்தை கே.யு.மோகனன் பிரபலமான ஒளிப்பதிவாளர் என்றாலும் மாளவிகாவுக்கு சினிமாவில் நடிப்பதில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லையாம். ஒருமுறை விளம்பர படம் ஒன்றின் படப்பிடிப்பில் மாளவிகாவை பார்த்தாராம் மம்முட்டி. அப்போது அவரது மகன் துல்கர் சல்மான் நடிக்கும் 'பட்டம் போலே' படத்திற்கு கதாநாயகியை தேடிக்கொண்டிருந்தார்களாம்.,

“மாளவிகா அந்த கதாபாத்திரத்துக்கு மிகச்சரியாக இருப்பார் என அவர்களிடம் சிபாரிசு செய்து என்னை சினிமாவுக்குள் இழுத்து வந்தது மம்முட்டி தான். அத்தனை பெரிய மனிதர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது” என கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !