11 வருடங்களுக்கு பிறகு மகேஷ்பாபு-திரிவிக்ரம் கூட்டணி
ADDED : 1664 days ago
தற்போது பரசுராம் இயக்கும் சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார் மகேஷ் பாபு. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படம் வருகிற ஜனவரிமாதம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் அடுத்தபடியாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் மகேஷ்பாபு நடிக்கும் தகவலை அதிகாரப் பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளனர். மகேஷ்பாபுவும், திரிவிக்ரமும் அதாது என்ற படத்தில்தான் முதன் முறையாக இணைந்தனர். அந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்று இரண்டு பேரின் திரை வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஆனபோதிலும் அதையடுத்து அவர்கள் இணைந்த கலேஜா என்ற படம் தோல்வியடைந்து விட்டது.அதையடுத்து கடந்த 11 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் இணையவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் தாங்கள் இணையப்போவதை இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். இப்படத்தில் பூஜா ஹெக்டே -திஷா பதானி ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். ஹா¢கா ஹாசன் கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இம்மாதமே இப்படம் தொடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.