அடங்கமறு இயக்குனருடன் இணையும் விஷால்
ADDED : 1717 days ago
இரும்புத்திரைக்கு பிறகு சண்டக்கோழி, அயோக்யா, ஆக்சன், சக்ரா என விஷால் நடித்த படங்கள் வெற்றிபெறவில்லை. இந்தநிலையில் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி என்ற படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இதையடுத்து ஜெயம்ரவி நடித்த அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால். ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, பைவ்ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.தற்போது விஷால் நடித்து வரும் எனிமி படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கார்த்திக் தங்கவேலு இயக்கும் படத்தில் வருகிற ஜூன் மாதம் முதல் நடிக்கப்போகிறார்.