ஐந்து மொழிகளில் வெளியாகிறதா வெற்றிமாறனின் விடுதலை?
ADDED : 1618 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரிகதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறு கதையை தழுவி உருவாகி வரும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சூரி.
மேலும், இந்த படத்தில் விஜயசேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவர் இந்த படத்திற்குள் வந்ததை அடுத்து எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டது. அதோடு, விடுதலை படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.அந்தவகையில், வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவான நான்கு படங்களுக்கும் கிடைக்காத பான் இந்தியா பட அங்கீகாரம் சூரி நடித்த படத்திற்கு கிடைக்கப்போகிறது.