சென்னை திரும்புகிறார் ரஜினி! புதிய படம் எப்போது தொடங்குகிறது?
ADDED : 1618 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு படம் திரைக்கு வருவதால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்தபோதும் சரியான பாதுகாப்புடன் தொடர்ந்து நடித்து வருகிறார் ரஜினி. அவருக்கான காட்சிகள் இன்னும் சில தினங்களில் படமாக்கப்பட்டுவிடும் என்பதால் அதையடுத்து சென்னை திரும்புகிறார்.
மேலும், கொரோனா இரண்டாவது அலை முடிந்ததும் மீண்டும் புதிய படங்களை நடிக்க திட்டமிட்டுள்ள ரஜினி, தற்போது கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரிடமும் கதை கேட்டு வைத்திருப்பவர், முதலாவதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் ஜூலை மாதத்திற்கு பிறகு நடிப்பார் என்றும் போயஸ்கார்டன் வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது.