சமந்தாவைத் தொடர்ந்து கொரியன் ரீமேக்கில் ரெஜினா!
ADDED : 1626 days ago
விஷாலுடன் நடித்த சக்ரா படத்திறகு பிறகு ரெஜினா தமிழில் நடித்த பார்ட்டி, கசடதபற போன்ற படங்களில் கிடப்பில் கிடக்கின்றன. ஆனால் தெலுங்கில் அவர் சில படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், தற்போது சமந்தா நடித்த ஓ பேபி என்ற கொரியன் ரீமேக் படத்தை தயாரித்த அதே நிறுவனம் மிட்நைட் ரன்னர்ஸ் என்றொரு கொரியன் படத்தையும் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கிறது.
சுதீர் வர்மா இயக்கும் இந்த ஆக்சன் திரில்லர் படத்தில் ரெஜினா ஒரு பயிற்சி போலீஸ் அதிகாரி வேடத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். நிவேதா தாமசும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஷாகினி தாகினி என்று டைட்டீல் வைக்கப்பட்டுள்ளது.