பிரபாஸ் படத்தில் நடனமாடும் ஸ்ரீநிதி ஷெட்டி
ADDED : 1626 days ago
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஸ்ரீநிதி ஷெட்டி. கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த இவர், தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார்.
இந்தநிலையில் பிரபாஸ் - ஸ்ருதிஹாசன் நடிப்பில் தெலுங்கு, கன்னடத்தில் பிரசாந்த் நீல்இயக்கி வரும் சலார் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஒரு ஸ்பெசல் பாடலுக்கு நடனமாடுகிறார். கொரோனா தொற்று முடிவடைந்து மீண்டும் சலார் படப்பிடிப்பு தொடங்கும்போது பிரபாசுடன் ஸ்ரீநிதி நடனமாடும் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.