ஆச்சார்யா படப்பிடிப்பு ரத்து - கணவருடன் நேரத்தை செலவிடும் காஜல்அகர்வால்
ADDED : 1642 days ago
கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல்அகர்வால். திருமணத்திற்கு பிறகு தனது படப்பிடிப்பு தளங்களுக்கு கணவரை அழைத்து வந்து தனது சினிமா நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு,திருமணத்திற்கு பிறகும் தனது கணவர் நடிப்புக்கு தடை போடாததால் வழக்கம்போல் சினிமாவில் நடித்து வருகிறார்.
அந்தவகையில், தமிழில் இந்தியன்-2, ஹாய் சினாமிகா போன்ற படங்களில் நடிப்பவர், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்ளயிருந்த காஜல்அகர்வால், கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருப்பதால் மும்பையில் உள்ள தனது வீட்டில் கணவருடன் நேரத்தை செலவிட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு, கணவரை கட்டித்தழுவிக்கொண்டு எடுத்துக்கொண்ட ஒரு செல்பியை தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் காஜல். அதோடு தனது குடும்ப உறுப்பினர்கள் அன்பு, ஆதரவு, கவனிப்பு என அனைத்தையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.