மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1611 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1611 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1611 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1611 days ago
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா இருவரும் காதல் திருமணம் புரிந்தவர்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதிக்கான ஆளும் கட்சி எம்எல்ஏவாக இருப்பதால் ரோஜா குடும்பத்தினர் பெரும்பாலும் நகரியில்தான் இருப்பார்கள்.
ரோஜா, செல்மணி தம்பதியருக்கு அன்சுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் அன்சுமாலிகா சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான பிறகுதான் அன்சுமாலிகாவும் அம்மாவைப் போலவே அழகாக இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிய வந்தது.
சமீபத்தில் அன்சுமாலிகா, ரோஜா ஆகியோர் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. விரைவில் அன்சுமாலிகா சினிமாவில் நடிப்பார் என்ற செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
“வருங்காலத்தில் எனது மனம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்பேன்,” என அவர் தெரிவித்துள்ளாராம். இருந்தாலும் சில தெலுங்குத் தயாரிப்பாளர்கள் அன்சுமாலிகாவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகளை ஆரம்பித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
1611 days ago
1611 days ago
1611 days ago
1611 days ago