உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அண்ணாத்த' முடிந்ததும் அமெரிக்கா செல்கிறார் ரஜினி?

'அண்ணாத்த' முடிந்ததும் அமெரிக்கா செல்கிறார் ரஜினி?

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனாலும், ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

இன்னும் சில நாட்களில் படத்தின் படப்பிடிப்பு முடிவடையலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு முடிவடைந்த பின் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வழக்கமான உடல்நலன் செக்கப்பிற்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகச் சொல்கிறார்கள்.

அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளனர். ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் தனது மனைவி, மற்றும் மகன்களுடன் சென்றுள்ளார். ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றால் அவர்களும் அவருக்குத் துணையாக அங்கு இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள், பத்திரிகையாளர்கள், சில தனிப்பட்ட நபர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ரஜினிகாந்த் அமெரிக்க செல்லலாம் என்கிறார்கள்.

ஐதராபாத்திலிருந்து ரஜினிகாந்த் சென்னை வந்ததும் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை சந்திக்கலாம் என்றும் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !