‛ஜே.பேபி' இயக்குனருடன் கைகோர்த்த மணிகண்டன்
ADDED : 13 hours ago
‛குடும்பஸ்தன்' படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் மணிகண்டன் தற்போது 'மக்கள் காவலன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் கைவசமாக அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டில் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ஜே.பேபி' . இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சுரேஷ் மாரி அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.