உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொடரும் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த மோகன்லால் : கதாநாயகியாக நடிக்கும் மீரா ஜாஸ்மின்

தொடரும் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த மோகன்லால் : கதாநாயகியாக நடிக்கும் மீரா ஜாஸ்மின்

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 230 கோடிக்கு மேல் வசூலித்தது. சென்டிமென்ட் கலந்த ஆக் ஷன் படமாக இந்த படத்தை இயக்கியிருந்தார் தருண் மூர்த்தி. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவர் மோகன்லால் நடிக்கும் ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் மோகன்லாலின் 366வது படமாக உருவாகும் இந்த புதிய படத்திற்கான துவக்க விழா பூஜை, வைக்கம் மகாதேவ கோவிலில் நடைபெற்றது.

படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 23ம் தேதி முதல் கேரளாவில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே மோகன்லாலுடன் பல படங்களில் நாயகியாக நடித்துள்ள மீரா ஜாஸ்மின், சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ஹிருதயப்பூர்வம் படத்தில் கிளைமாக்ஸில் ஒரு நிமிடம் மட்டுமே வந்து போகும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மோகன்லாலுடன் இந்த படத்தில் ஜோடியாகவே நடிக்க இருக்கிறார் மீரா ஜாஸ்மின்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !