'சங்கராந்திகி வஸ்துனம்' ரீமேக்கில் அக்ஷய்குமார்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். தென்னிந்திய மொழிகளில் வெற்றிகரமாக ஓடும் படங்களின் ரீமேக்குளில் அதிகம் நடித்தவர். இருந்தாலும கடந்த சில வருடங்களில் அவரது படங்கள் பெரிய வெற்றியைப் பெறுவதில்லை. ஒரு சில படங்கள் மட்டும்தான் ஓடியுள்ளன.
வெற்றி, தோல்வி என வந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர். அவர் நடித்து கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த 'ஜாலி எல்எல்பி 3' படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அடுத்து சில ஹிந்திப் படங்களில் நடிக்க உள்ளார்.
இதனிடையே, கடந்த வருடம் தெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற 'சங்கராந்திகி வஸ்துனம்' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வந்துள்ளன. அப்படம் 300 கோடி வசூலைப் பெற்றது. 'வாரிசு' படத்தின் தெலுங்குத் தயாரிப்பாளரான தில் ராஜு இந்தப் படத்தைத் தயாரிக்க, அக்ஷய் குமார், வித்யா பாலன் நடிக்க உள்ளார்களாம்.
இந்த வருட சங்கராந்திக்கு தெலுங்கில் வெளியான இரண்டு படங்களுக்கு இசையமைத்த பீம்ஸ் செசிரோலியோ இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த மாதத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.