உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் 3 பொங்கல் படங்கள் 100 கோடி வசூல்

தெலுங்கில் 3 பொங்கல் படங்கள் 100 கோடி வசூல்

2026ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சர்ச்சையாவும், பரபரப்பாகவும்தான் ஆரம்பமாகியுள்ளது. பொங்கலுக்கு மூன்று படங்கள் வெளிவந்தாலும் அதில் இரண்டு படங்கள்தான் வரவேற்பைப் பெற்று ஓடி வருகிறது. இருந்தாலும், அதில் ஒரு படம் கூட இன்னும் 100 கோடியைக் கடக்கவில்லை.

அதேசமயம் தெலுங்கில், சங்கராந்தியை முன்னிட்டு வெளியான 5 படங்களில் 3 படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. பிரபாஸ் நடித்து வெளியான 'தி ராஜா சாப்', சிரஞ்சீவி நடித்து வெளியான 'மன ஷங்கர வரபிரசாத் காரு', ஆகிய இரண்டு படங்கள் 200 கோடியையும், நவீன் பொலிஷெட்டி நடித்து வெளியான 'அனகனகா ஒக ராஜு', படம் 100 கோடியையும் கடந்துள்ளன.

இவற்றில் 'தி ராஜா சாப்' படம் 200 கோடியைக் கடந்தாலும் அதன் பட்ஜெட்டில் பாதியைத்தான் வசூலித்துள்ளதாம். அதனால் பலத்த நஷ்டம் வரும் என்கிறார்கள். மற்ற இரண்டு படங்களும் லாபத்தைத் தந்துவிடும்.

தமிழில் 'பராசக்தி' படம் 75 கோடியைக் கடந்துள்ளதாகத் தகவல். அந்தப் படம் 100 கோடியைக் கடக்குமா என்பது சில நாட்களில் தெரியும். திரையுலகில் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்காகக் காத்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தப் படத்தின் நிலை என்னவென்பது தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !