ஆண்டின் தொடக்கம் இப்படி இருக்கிறது; சூப்பர் ஹிட்டுக்காக காத்திருப்பு
பொங்கல் படங்களில் 'தலைவர் தம்பி தலைமையில்' மட்டுமே ஓரளவு ஓடிக்கொண்டிருக்கிற நிலையில், ஜனவரி 23ம் தேதி இந்த வாரம் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, நட்டி நடித்த 'திரெளபதி 2' மற்றும் அஜித்தின் 'மங்காத்தா' ரீ ரிலீஸ், 'ஹாட்ஸ்பாட் 2மச்', புதுமுகங்கள் நடித்த 'மாயபிம்பம்', பொங்கல் ரிலீசில் இருந்து தள்ளிப்போன 'ஜாக்கி' ஆகிய 5 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
ஜனவரி 30ம் தேதி சில படங்களும் வெளியாக திட்டமிடுகின்றன. ஒருவளை கோர்ட் தடைகள் மீறி, ஜனநாயகன் ரிலீஸ் ஆனால் இந்த படங்களின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் படங்கள் பெரிய லாபத்தை அள்ளிக்கொடுக்காத நிலையில், ஜனநாயகன் ரிலீசுக்காக தியேட்டர் உரிமையாளர்கள் காத்திருக்கிறார்கள். அதேசமயம் பொங்கல் படங்கள் தங்கள் வசூல் அப்டேட் நிலவரத்தை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
பராசக்தி 100 கோடியை தொட்டவுடன் பட நிறுவன தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு. இந்த வாரம் 'தலைவர் தம்பி தலைமையில்' பட வெற்றிவிழாவை நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. 2026ம் ஆண்டு தொடக்கம் சுமாராகவே இருக்கிறது. சூப்பர் ஹிட்டை எந்த படமும் தரவில்லை என்பது திரையுலகினர் கருத்தாக இருக்கிறது.