தனுஷின் கர்ணன் : மே 14ல் ஓடிடிக்கு வருகிறது
ADDED : 1639 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகிபாபு உள்பட பலர் நடித்து, ஏப்ரல் 9ல் திரைக்கு வந்த படம் கர்ணன். 50 சதவிகித பார்வையாளர்களை கொண்டு திரையிடப்பட்ட இப்படம் அனைத்து பகுதிகளிலும் வசூல் சாதனை செய்து வந்தது. அதேசமயம் ஜாதி ரீதியான விமர்சனங்களையும் இப்படம் சந்தித்தது. கொரோனா பிரச்னையால் தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்ட நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. வருகிற மே 14ல் அமேசான் ஓடிடி தளத்தில் கர்ணன் ரிலீஸாகிறது.