ஷங்கரின் வில்லன் சென்டிமென்ட்டில் சிக்குவாரா சுதீப் ?
ADDED : 1613 days ago
கமலை வைத்து இந்தியன்-2 படத்தை ஆரம்பித்த இயக்குனர் ஷங்கர், தற்போது அந்தப்படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஷங்கர் படங்களில் வில்லன் கதாபாத்திரம் எப்போதுமே பவர்புல்லாக இருக்கும். அந்தவகையில் ராம்சரண் படத்தில் கன்னட ஹீரோ சுதீப்பை வில்லனாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஐ படத்தில் சுரேஷ்கோபி, 2.O படத்தில் அக்சய் குமார் என மற்ற மொழிகளில் ஹீரோக்களாக நடித்து வருபவர்களை அழைத்து வந்து வில்லனாக்கும் ஒரு சென்டிமென்ட்டை தொடர்ந்து வருகிறார் ஷங்கர். தவிர ஷங்கர் படத்தில் நடிக்க அனைத்து நடிகர்களுமே ஆர்வம் காட்டவே செய்வார்கள். அந்தவகையில் சுதீப்பும் ஷங்கர் சென்டிமென்ட்டில் சிக்குவார் என்றே தெரிகிறது.