உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியான மீனா

மீண்டும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியான மீனா

திருமணத்திற்கு முன்பு தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தவர் மீனா. அந்த வகையில் தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜூனா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அதையடுத்து, திருமணத்திற்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் மலையாளத்தில மோகன்லாலுடனும், தெலுங்கில் வெங்கடேசுடனும் நடித்துள்ள மீனா, தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்து தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து கோபிசந்த் மிலினேனி இயக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக ஹோம்லியான வேடத்தில் நடிக்கிறார் மீனா. இதற்கு முன்பு 1992ல் அஸ்வமேதம் உள்ளிட்ட சில படங்களில் பாலகிருஷ்ணாவுடன் மீனா இணைந்து நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !