மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1581 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1581 days ago
நாடக நடிகராக இருந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் ஜோக்கர் துளசி. நாடகங்களில் ஜோக்கர் வேடம் போட்டதால் ஜோக்கர் துளசி என்றே அழைக்கப்பட்டார். தேவராஜ் மோகன் இயக்கிய உங்களில் ஒருத்தன் என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படம் 1976ம் ஆண்டு வெளிவந்தது.
தொடர்ந்து இளைஞரணி, அவதார புருஷன், தமிழச்சி, உடன்பிறப்பு, திருமதி பழனிசாமி, புருஷன் பொண்டாட்டி, சாமுண்டி, மண்ணைத் தொட்டுக் கும்பிடணும், புதுமைப் பித்தன், சித்திரைப் பூக்கள், நம்ம ஊரு பூவாத்தா, சின்ன மணி, செவத்தப் பொண்ணு, நீலக்குயில், வாழ்க ஜனநாயகம், மருது பாண்டி, மறவன். உள்பட பல படங்களில் நடித்தார்.
சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரை சீரியல்களில் நடித்தார். கேளடி கண்மணி ,வாணி ராணி, நாணல், கோலங்கள் போன்ற பல முன்னணி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜோக்கர் துளசி அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
1581 days ago
1581 days ago