மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1580 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1580 days ago
கொரோனாவின் 2வது அலைக்கு திரைப்படத்துறையினர் தொடர்ந்து பலியாகி வருகிறார்கள். நேற்று இயக்குனர் தயாளன் சேவியரும், தயாரிப்பாளர் அந்தோணியும் பலியானார்கள். தயாளன் சேவியர், முரளி, விந்தியா, தேவயானி நடித்த கண்ணுக்கு கண்ணாக என்ற படத்தை இயக்கினார். பாலைவனச்சோலை படத்தை ரீமேக் செய்தார். சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவருக்கு வயது 56.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் அந்தோணி. சுசீந்திரன் இயக்கத்தில் விதார்த்த நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தை தயாரித்தார். 52 வயதான அந்தோணி நேற்று தூத்துக்குடியில் உள்ள பெற்றோரை பார்க்க சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு கொரோன தொற்று இருந்திருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
1580 days ago
1580 days ago