மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1582 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1582 days ago
உலக அளவில் பல நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் நிகழ்ச்சி 'மாஸ்டர் செப்'. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரான்க் ரோட்டம் என்பவரது எண்ணத்தில் உருவான நிகழ்ச்சி இது. 1990ம் ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி, பின்னர் 2005ம் ஆண்டு சில மாற்றங்களுடன் பிபிசி டிவியில் ஒளிபரப்பானது.
தற்போது உலகம் முழுவதும் 40 நாடுகளில் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தமிழில் ஒரு முன்னணி டிவியில் விரைவில் இந்த நிகழ்ச்சி தனது ஒளிபரப்பை ஆரம்பிக்க உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கெனவே இதே டிவியில் 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களுக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அது போல 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சிக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
1582 days ago
1582 days ago